Monday, July 23, 2018

கண்ணதாசனின் அனுபவங்கள்


Life and Experience (Experience is God)

தன்னுடைய அனுபவத்தின் மூலமாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்பவன் அறிவாளியாக, விபரமறிந்தவனாக ஆகிறான். ஆனால் மற்றவர்களுடைய அனுபவத்தின் மூலமாக கற்றுக்கொண்டவன் புத்திசாலியாகிறான். அனுபவம் என்பது அவ்வளவு முக்கியமானது. அதையே கண்ணதாசன் தன்னுடைய வரிகளில் அருமையாக வடித்திருப்பார்.

பிறப்பின்  வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து  பாரென இறைவன் பணித்தான் !

படிப்பெனச் சொல்வது  யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான் !

அறிவெனச் சொல்வது  யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான் !

அன்பெனப் படுவது என்னெனக்   கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான் !

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக்  கேட்டேன்!
மணந்து பாரென  இறைவன் பணித்தான் !

பிள்ளை என்பது யாதெனக்  கேட்டேன்!
பெற்றுப் பாரென  இறைவன் பணித்தான் !

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென  இறைவன் பணிந்தான் !

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென  இறைவன் பணித்தான் !
இறப்பின்  பின்னது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென  இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவன் நீயேன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 
அனுபவம் என்பதே நான்தான் என்றான்!

No comments:

Post a Comment